LATEST NEWS
9 வயதில் கோடிங்… 12 வயதில் சொந்த கம்பெனி!.. 3 நாடுகளை மிரள வைத்த 12 வயது சிறுமியின் AI மிராக்கல்..!” இணையதளத்தை கலக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!
கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மனா ஜம்பாலா, ‘வோக்ஸா’ என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒன்பது வயதிலேயே பைதான் கோடிங் கற்கத் தொடங்கிய இவர், தனது 11-வது வயதிலேயே ஏஐ மென்பொருள்களைத் தானாகவே உருவாக்கும் திறனைப் பெற்றார். தற்போது ஏழாம் வகுப்பு மட்டுமே படிக்கும் இந்த இளம் சிஇஓ-வின் நிறுவனம், வெறும் கனடாவோடு நின்றுவிடாமல் இந்தியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள பல வணிக நிறுவனங்களுக்கும் அதிநவீன தொழில்நுட்ப சேவைகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.
தனது தந்தையின் அலுவலகத்தில் பல வாடிக்கையாளர்களின் அழைப்புகள் சரிவரக் கவனிக்கப்படாமல் தவறவிடப்படுவதைப் பார்த்த மனா, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஏஐ குரல் உதவியாளரைக் கண்டுபிடித்தார். இந்தத் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, முன்பதிவுகளை மேற்கொள்வது போன்ற வேலைகளைத் துல்லியமாகச் செய்கிறது. ‘வோக்ஸா ஏஜென்ட்ஸ்’ என்ற அடுத்தகட்ட திட்டத்திலும் தீவிரமாகப் பணியாற்றி வரும் இவர், ஒருபுறம் பள்ளிக்கூடம், கால்பந்து, நண்பர்கள் என ஒரு சாதாரண 12 வயது சிறுமியாகவும், மறுபுறம் சர்வதேச அளவில் சாதிக்கும் இளம் தொழில்முனைவோராகவும் திகழ்ந்து பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்.
