LATEST NEWS
என்ன நடந்தது? காணாமல் போன சிறுமி…கூலித் தொழிலாளியின் மகளுக்கு நேர்ந்த கொடூரம்…நள்ளிரவில் அரங்கேறிய திதிகிடும் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போன அந்தச் சிறுமியை அவளது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ரத்தக் காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்த நந்தகிராம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமியின் உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் உயிரிழப்பதற்கு முன்பாக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உடலில் உள்ள பல்வேறு எலும்பு முறிவுகள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து சிறுமி கீழே தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் பலமாக சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் அதே கட்டுமான இடத்தில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து கொண்டு, அங்கேயே தற்காலிகக் கூடாரத்தில் தங்கி வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 முதல் 5 நபர்களைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். இக்கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரைத் தாக்க முயன்றதால், அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காண சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளையும் தடயவியல் சான்றுகளையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
