இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.. எழுத்தாளர் பூமணி மறைவு.. ஓடோடி வந்து அரசு மரியாதை அறிவித்த CM விஜய்..!! – cinefeeds
Connect with us

CINEMA

இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.. எழுத்தாளர் பூமணி மறைவு.. ஓடோடி வந்து அரசு மரியாதை அறிவித்த CM விஜய்..!!

Published

on

தமிழ் எழுத்துலகின் பெரும் ஆளுமையும், சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான மூத்த படைப்பாளி பூமணி சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். இத்துயரச் செய்தியறிந்து மனவேதனை அடைந்த தமிழக முதலமைச்சர் விஜய், “பூமணியின் மறைவு தமிழ் இலக்கியக் கோட்டைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” எனத் தனது நெஞ்சார்ந்த இரங்கலை வெளியிட்டார். மேலும், அவரது வாழ்நாள் இலக்கியச் சேவையைக் கௌரவிக்கும் பொருட்டு, மறைந்த எழுத்தாளரின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் காலமான பூமணியின் உடல், தற்போது அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மற்றும் இலக்கியவாதிகளின் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இறுதிச் சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் பூமணியின் உடலுக்குத் காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in