மொபைல் யூசர்களுக்கு ஜாக் பாட்.. 70% குறையும் ரீசார்ஜ் கட்டணம்.. TRAI அசத்தல் அறிவிப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மொபைல் யூசர்களுக்கு ஜாக் பாட்.. 70% குறையும் ரீசார்ஜ் கட்டணம்.. TRAI அசத்தல் அறிவிப்பு..!!!

Published

on

நமக்கு டேட்டா தேவையே இல்லை என்றாலும், ரீசார்ஜ் செய்யும்போது அதற்கும் சேர்த்தே கட்டாயமாகப் பணம் வாங்குறாங்களே என்ற கவலைக்கு இனி முடிவு வரப்போகிறது. இதனைத் தடுப்பதற்காக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய அதிரடி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டமானது தற்போது பொதுமக்களின் பரிசீலனையில் உள்ளதாகவும், உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு விரைவில் இது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதி கிடைக்கும். ஏனெனில், இனி டேட்டா தேவையில்லாதவர்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டும் கொண்ட குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை எளிதாகத் தேர்வு செய்ய முடியும். இதன் காரணமாக, தற்போதைய மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சுமார் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in