BREAKING:இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.. வாரத்தின் முதல் நாளே அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.. வாரத்தின் முதல் நாளே அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை..!!

Published

on

நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் ஆடம்பரமான ஆபரணம் மட்டுமல்ல; அது அவசரக் காலங்களில் கைகொடுக்கும் ஆகச்சிறந்த குடும்பப் பாதுகாப்புக் கவசமும், வாழ்நாள் சேமிப்புமாகும். ஆனால் கடந்த சில மாசங்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தது. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவின்படி, 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களால் உற்று நோக்கப்படும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 வரை சரிந்து, ரூ.1,05,600-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாகவே தற்போதைய நம்மூரிலும் சரிவைச் சந்தித்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய சந்தை மாற்றங்களின் எதிரொலியாக உள்நாட்டிலும் தங்கம் விலை குறைந்துள்ளதால், திருமண சுபகாரியங்களுக்குத் தங்கம் வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் இன்று காலை முதலே மகிழ்ச்சியுடன் நகைக்கடைகளை நோக்கிச் படையெடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in