“என் சொந்த விருப்பம்.. யாரும் கட்டாயப்படுத்தல!”.. தவெக-வை சுற்றிய புகார்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அதிரடி பதிலடி.. அதிரும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் சொந்த விருப்பம்.. யாரும் கட்டாயப்படுத்தல!”.. தவெக-வை சுற்றிய புகார்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அதிரடி பதிலடி.. அதிரும் அரசியல் களம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் தங்களைக் குதிரை பேரத்தில் ஈடுபடுத்தி இழுப்பதாக திமுவினர் ஆளுநரிடம் மீண்டும் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் அண்மையில் தவெகவில் இணைந்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் என்னுடைய சொந்த மற்றும் சுய விருப்பத்தின் பேரில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன்; இதில் யாருடைய தூண்டுதலோ அல்லது கட்டாயமோ எள்ளளவும் கிடையாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முன்னதாக தவெகவில் இணைந்த ஆரம்பத்தில், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் அவர்கள் நேரடியாகத் தன்னை அணுகிப் பேசியதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரவலாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. தவெக மீதான ஆளுநரின் புகார் மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு இடையே, தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in