LATEST NEWS
மக்களே நோட் பண்ணுங்க..! உங்க குறைகளை நேரடியாக முதல்வரிடம் சொல்ல புது செயலி.. அரசு அதிரடி செயல்…!!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தற்போது பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்கிறார். ஒருவரால் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும் என்பதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் மக்களின் நலனில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
தன் தொகுதி மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்காக, சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மா நகர் முதல் தெருவில் புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை அவர் அமைத்துள்ளார். இந்த அலுவலகத்தை இன்று மாலை நேரில் சென்று திறந்து வைத்த அவர், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும் வகையில் அதே வளாகத்தில் ஒரு புதிய இ-சேவை மையத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.
மக்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ‘மக்கள் சேவை தளம்’ என்ற புதிய செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பூர் வாசிகள் தங்களது கோரிக்கைகளையும் புகார்களையும் எந்நேரமும் நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இந்தச் சேவையைப் பெற http://Tvkcm.com என்ற இணையதளத்தையோ அல்லது 9498500444 என்ற வாட்ஸ்அப் எண்ணையோ பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
