“அடுப்பை பத்தவச்சா சமைக்கணும் தம்பி… இப்படி உடம்பை வேக வைக்கக் கூடாது..!!” இணையத்தில் வைரலாகும் இளைஞர் செய்த புஷ்-அப் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுப்பை பத்தவச்சா சமைக்கணும் தம்பி… இப்படி உடம்பை வேக வைக்கக் கூடாது..!!” இணையத்தில் வைரலாகும் இளைஞர் செய்த புஷ்-அப் வீடியோ..!!

Published

on

சமூக ஊடகங்களில் லைக்குகளையும் பார்வையாளர்களையும் பெறுவதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் எரியும் எரிவாயு அடுப்பின் மேல் புஷ்-அப் எடுக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகைய ஆபத்தான செயல்கள் விபத்துக்களில் முடிவடையக்கூடும் என்ற போதிலும், சிலர் பிரபலமடைவதற்காகத் தங்கள் உயிரையே பணையம் வைப்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

வைரலாகும் இந்த வீடியோவில், அந்த இளைஞர் முதலில் எரிவாயு அடுப்பைப் பற்றவைக்கிறார். அடுப்பில் நெருப்பு எரிவது தெளிவாகத் தெரிகிறது. அதன் பிறகு, அவர் எரியும் அடுப்பின் இருபுறமும் கைகளை வைத்துக்கொண்டு புஷ்-அப் செய்யத் தொடங்குகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும்போது அவருடைய முகமும் உடலும் எரியும் நெருப்பிற்கு மிக அருகில் சென்று வருகின்றன. ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அவரது முகம் அல்லது உடல் கடுமையாகக் தீக்காயங்களுக்கு உள்ளாகக்கூடும் என்ற நிலையில், சிறிதும் பயமின்றி அவர் இந்த ஸ்டண்டை செய்கிறார்.

Advertisement

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெறும் சில விநாடி ரீல்ஸ்களுக்காகவும், இணையதளப் புகழுக்காகவும் சொந்தப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவது முற்றிலும் முட்டாள்தனமானது என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும், இதைப் பார்த்து மற்றவர்களும் இத்தகைய ஆபத்தான செயல்களைப் பின்பற்ற முயற்சித்தால் அது பெரும் ஆபத்தில் முடியும் என்றும் பயனர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in