LATEST NEWS
பெண்ணின் மேலாடையைக் கழற்றி அந்த இடத்தை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
பெண்ணின் மேலாடையைக் கழற்றி, மார்பகத்தைத் தொட்டுப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் பலாத்கார முயற்சி ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரின் பங்கா மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஸ்டூடியோ ஒன்றிற்குப் புகைப்படம் எடுக்க வந்த பெண்ணை, அவரது தந்தையை வெளியே அனுப்பிவிட்டு, அறையினுள் அடைத்துச் சல்வாரைக் கழற்ற முயன்று பாலியல் துன்புறுத்தல் செய்த நபரின் வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. உடலுறவு முயற்சிக்கான அல்லது ஊடுருவலுக்கான நேரடி ஆதாரங்கள் இல்லாததால், இது IPC 354-ன் கீழ் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் குற்றமாக மட்டுமே கருதப்படும் என உயர் நீதிமன்றம் கூறி, குற்றவாளியின் தண்டனையைக் குறைத்தது.
சமூக வலைதளங்களிலும் சட்ட வல்லுநர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்தீர்ப்பைக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் நீதிபதிகள் அனைவரும் தேசிய நீதித்துறை அகாடமி தயாரித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. நீதிபதிகளின் அணுகுமுறையில் உணர்திறன் அவசியம் என்பதை வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், இந்த வழிகாட்டுதல் அறிக்கையை அனைத்து உயர் நீதிமன்றங்களின் இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண்ணின் ஆடையைக் கழற்ற முயல்வது மற்றும் உடலளவில் அத்துமீறுவது போன்ற கடுமையான செயல்களை வெறும் மானபங்கக் குற்றமாக மட்டும் சுருக்குவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பையும் சட்டத்தின் நோக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
