LATEST NEWS
“ஏன்டா தம்பி… இதெல்லாம் தேவையா..? ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் வீடியோ..! இந்த பைக் ரைடரை பார்த்தா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!!!”
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. நடனம், வினோதமான கண்டுபிடிப்புகள் மற்றும் சாகச வீடியோக்கள் எனப் பல விஷயங்கள் தினமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, நெட்டிசன்களைப் பெருமளவில் வியப்பில் ஆழ்த்தியுள்ள ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையிலும் சாலையில் சாதாரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பொதுவாக மோட்டார் சைக்கிள்களை இயக்குவதற்கான ஆக்சிலரேட்டர் வலது கை பக்கமே அமைந்திருக்கும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபரின் வலது கை உடைந்த நிலையில், மாவுக்கட்டு போடப்பட்டு அசையாமல் தொங்குகிறது. இதனால், அவர் தனது இடது கையை குறுக்காகக் கொண்டு சென்று வலதுபுற கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, ஒற்றைக் கையால் பைக்கின் வேகத்தையும் சமநிலையையும் கட்டுப்படுத்தி ஓட்டுகிறார். இந்த நிலையில் பைக் ஓட்டுவது மிகவும் கடினமானது என்றாலும், அவர் எந்தவொரு பயமும் பதற்றமும் இன்றி சாலையில் பயணிப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பல பயனர்கள் அந்த நபரின் இந்தச் செயலைக் கண்டு வியப்படைந்துள்ளனர். அதே நேரத்தில், இது மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என்று பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒற்றைக் கையில் பைக்கின் இருபுறமும் பேலன்ஸ் செய்வது மிகவும் கடினம் என்பதால், திடீரென எதிரே ஏதேனும் வாகனம் வந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இது போன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
