LATEST NEWS
யார் கிட்ட..? நடுரோட்டில் ‘சிங்கம்’ ஆட்டம்..! அநாகரிகமாக நடந்துகொண்ட நபருக்கு… பணியில் இல்லாத பெண் போலீஸ் கொடுத்த மரண மாஸ் பாடம்..!!!
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே, பணியில் இல்லாத பெண் காவலர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபரைத் தைரியமாகப் பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண் காவலரிடம், ஒரு நபர் ஆபாசமான சைகைகளைச் செய்து, அநாகரிகமான முறையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அவர் ஒரு காவலர் என்பது தெரியாமல், சாதாரணப் பெண் என்று நினைத்து அந்த நபர் இந்த இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சற்றும் அஞ்சாத அந்தப் பெண் காவலர், அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லாமல், உடனடியாக அந்த நபரைத் தடுத்து நிறுத்தினார். அவனது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, அங்கிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்த கார்தா காவல் நிலையத்திற்கு பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையிலேயே நடக்க வைத்து இழுத்துச் சென்றார். ஒரு பெண் துணிச்சலாகக் குற்றவாளியைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்ற இந்த அசாதாரணக் காட்சி, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களையும் கடைக்காரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
காவல் நிலையத்தை அடைந்ததும், அந்த நபர் மீது பெண் காவலர் முறைப்படி புகார் அளித்தார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆகாஷ் கோஷ் என்ற டெலிவரி ஏஜென்ட் என்பது தெரியவந்தது. உடனடியாகப் போலீசார் அவரைத் தங்களது காவலில் எடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துமீறலில் ஈடுபட்டவருக்குப் பயந்து ஓடாமல், தக்க பாடம் புகட்டி சட்டத்தின் முன் நிறுத்திய அந்தப் பெண் காவலரின் துணிச்சலான செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Wikipedia
