விஜய் வெற்றிக்கு காரணம் யார் தெரியுமா..? புதுக்குண்டை தூக்கிப்போட்ட திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.. அதிர்ச்சியில் உறைந்த அதிமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் வெற்றிக்கு காரணம் யார் தெரியுமா..? புதுக்குண்டை தூக்கிப்போட்ட திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.. அதிர்ச்சியில் உறைந்த அதிமுக..!!

Published

on

பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர், அதிமுக தலைமைக்கு முக்கியக் கோரிக்கை விடுத்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் சமயத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கள், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் தோல்விக்கு வழிவகுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய்யின் பொதுக்கூட்டத்தைக் குறிப்பிட்டு, “அங்கே கொடி பறக்கிறது பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாகப் பேசியதே அதிமுக தொண்டர்களை நிலைகுலைந்து போகச் செய்தது என்று சிவசங்கர் சாடியுள்ளார். இதன் காரணமாகவே சென்னை உள்ளிட்ட 4 முக்கிய மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்றும் அவர் விவரித்துள்ளார். எனவே, அதிமுகவில் இருப்பவர்கள் இப்போதாவது தங்களது தூக்கத்தில் இருந்து எழ வேண்டும் என்றும், இனிவரும் காலங்களிலாவது அதிமுக தலைமை விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in