LATEST NEWS
வெடித்தது சர்ச்சை..! அமைச்சர் நிர்மல்குமார் மனைவிக்கு மட்டும் சிறப்பு சலுகை..? காலியிடத்தை மறைத்து ரகசிய உத்தரவு… கொதிக்கும் ஆசிரியர் சங்கங்கள்..!
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது பணிமாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் சென்னை லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அயல்பணி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில் இருந்த காலியிடத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டு, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் இந்த மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
ஆசிரியர் சங்கங்களின் இந்த புகார்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் மனைவியின் இந்த இடமாற்றம் என்பது நிர்வாகக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட வழக்கமான அயல்பணி உத்தரவே தவிர, பொது இடமாறுதல் கலந்தாய்வின் கீழ் வழங்கப்பட்டது அல்ல என்று அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கலந்தாய்வு விதிகளை மீறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தரப்பில் அதிருப்தி நிலவி வருகிறது.
