வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1695… காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1695… காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!!

Published

on

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தின்படி, உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போது ஒரு மெட்ரிக் டன் எல்பிஜியின் விலை சுமார் 796 டாலராக உள்ளது. இந்த சர்வதேச சந்தை விலைக் கணக்கீட்டின்படி பார்த்தால், இந்தியாவில் தற்போது 942 ரூபாய்க்கு விற்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டரின் உண்மையான விற்பனை விலை 1,695 ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும் பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.

இதற்குப் பதிலாக, அரசு நேரடியாக மக்கள் மீது சுமையை ஏற்றாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மறைமுகமாக மானியங்களை வழங்கி வருகிறது. இதன்படி, சந்தை விலைக்கும் தற்போதைய விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையான சுமார் 700 ரூபாயை, ஒரு சிலிண்டருக்கு மறைமுக மானியமாக மத்திய அரசே எண்ணெய் நிறுவனங்களுக்குத் தந்துவிடுகிறது. போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in