“நடுரோட்டுல எதுக்குப்பா இந்த தேவையில்லாத ஆணி…?! வீலி பண்ண போயி விபத்தில் சிக்கிய வாலிபர்..!” சமூக வலைதளங்களில் வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நடுரோட்டுல எதுக்குப்பா இந்த தேவையில்லாத ஆணி…?! வீலி பண்ண போயி விபத்தில் சிக்கிய வாலிபர்..!” சமூக வலைதளங்களில் வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!

Published

on

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோ வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பரபரப்பான சாலையில் கே.டி.எம் டியூக் பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர், திடீரென பைக் வீலி செய்ய முயன்று விபத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாதாரணமாக பைக்கை ஓட்டிச் செல்லும் அந்த இளைஞர், திடீரென முன் சக்கரத்தை மேலே தூக்கி வீலி செய்ய முயல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது கட்டுப்பாடு இழந்து, பைக்குடன் சேர்ந்து சாலையில் மிகக் கொடூரமாக கீழே விழுந்து சறுக்கிச் செல்கிறார். இந்த விபத்தில் அவருக்கு எந்த அளவுக்குக் காயம் ஏற்பட்டது என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவர் விழுந்த விதத்தைப் பார்க்கும்போது பலத்த காயம் அடைந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement

எக்ஸ் தளத்தில் ‘@iam___smash’ என்ற கணக்கில் “Fully satisfied” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள மோகத்திற்காக ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான பைக் சாகசங்களைச் செய்வது சாகசக்காரருக்கு மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பிற பொதுமக்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in