LATEST NEWS
“நாங்கள் பிழைப்போம் என்றே நினைக்கவில்லை..!” நடுவானில் குலுங்கிய விமானம்… காற்றில் பறந்த பயணிகள்.. ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது என்ன..? நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஃபூகெட் – டெல்லி விமானத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான கொந்தளிப்பு காரணமாகப் பயணம் செய்த பயணிகள் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் சந்தித்துள்ளனர். விமானத்தில் திடீரென ஏற்பட்ட இந்தக் குலுக்கலால், சீட்பெல்ட் அணியாமல் இருந்த பல பயணிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு, விமானத்தின் மேல்பகுதியில் தலை மோதிப் பலத்த காயமடைந்தனர். சில விநாடிகள் விமானமே ஆபத்தான நிலைக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், பயணிகள் பலரையும் மரண பயத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
Air India: Phuket – Delhi, 04.08.2026.
The worst two hours of my life. Please, please, please always wear your seatbelt on a plane, even when the seatbelt sign is off.
I saw people being thrown into the air, hitting their heads, and getting injured. For a while, I genuinely… pic.twitter.com/3bVjcZZ18g— Minchen (@minchen_t) August 4, 2026
விமானப் பயணங்களின் போது சீட்பெல்ட் சிக்னல் அணைக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் எப்போதும் சீட்பெல்ட் அணிந்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தத் திடுக்கிடும் சம்பவம் உணர்த்தியுள்ளது. காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், “எந்த நேரத்திலும் எதிர்பாராத கொந்தளிப்பு ஏற்படலாம் என்பதால், உங்கள் இருக்கையில் இருக்கும் வரை எப்போதும் சீட்பெல்ட் அணிந்திருங்கள்” என இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் கண்ணீர் மல்க எச்சரித்துள்ளனர்.
