பாஸ்..! ஸ்டாலின் போட்டோவை சட்டைப்பையில வச்சிருக்கீங்களே ஏன்..? ஓபிஎஸ் சொன்ன அந்த பதில்… அலறவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் வெடித்த சண்டை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாஸ்..! ஸ்டாலின் போட்டோவை சட்டைப்பையில வச்சிருக்கீங்களே ஏன்..? ஓபிஎஸ் சொன்ன அந்த பதில்… அலறவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் வெடித்த சண்டை..!!

Published

on

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டைப்பையில் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். “ஏன் மு.க.ஸ்டாலினின் படத்தை சட்டைப்பையில் வைத்துள்ளீர்கள்?” என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக்காகவும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருவதால், அவரது கொள்கைகளை மதித்து அந்தப் புகைப்படத்தை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேரவையில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது அரசியல் நிலப்பாடுகளையும் கொள்கைகளையும் மாற்றி, அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருப்பவர் என்று விமர்சித்தார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஓபிஎஸ், அரசியல் சுயலாபத்திற்காக அதிமுகவில் இருந்து தவெகவிற்கு முதலில் இடத்தை மாற்றிக் கொண்டு ஓடியதே செங்கோட்டையன் தான் என்று சுட்டிக்காட்டி காரசாரமாகப் பேசினார்.

Advertisement

இந்த விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஓபிஎஸ் வைத்துள்ளதை தவெகவினர் கடுமையாக விமர்சித்தனர். கொள்கைகளை மறந்துவிட்டுத் தலைவர்கள் தங்களின் பாக்கெட் படங்களையும், கட்சிகளையும் மாற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த சட்டைப்பை விவாதம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in