என்னதான் நடக்குமோ..? முதலமைச்சர் விஜய் கைவசம் 3 ரகசிய கோப்புகள்… துரைமுருகன் விதித்த 1 வார கெடு… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னதான் நடக்குமோ..? முதலமைச்சர் விஜய் கைவசம் 3 ரகசிய கோப்புகள்… துரைமுருகன் விதித்த 1 வார கெடு… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய மூன்று முக்கிய கோப்புகள் தமது மேஜையில் இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஆளும் தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அந்த ஆதாரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்தச் சூழலில், முதலமைச்சர் குறிப்பிட்ட அந்த மூன்று துறைகளின் கோப்புகளையும் ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் மற்றும் பேரவையின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாகக் கெடு விதித்துள்ளார். குறிப்பிட்ட கெடுவுக்குள் கோப்புகளை வெளியிடத் தவறினால், பேரவையில் தவறான தகவலைத் தந்ததாகக் கூறி முதலமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

திமுகவின் இந்த கெடு விதிப்பால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த மூன்று முக்கியக் கோப்புகளில் அப்படி என்னதான் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், அவை எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in