“இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?” ராத்திரி பகலா படிச்சிட்டு வந்தா சண்டை போடுறாங்க.. பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?” ராத்திரி பகலா படிச்சிட்டு வந்தா சண்டை போடுறாங்க.. பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்..!!

Published

on

சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், தொடர்ந்து காரசாரமான வீண் வாக்குவாதங்கள் மட்டுமே அரங்கேறி வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். “நாங்கள் தேர்வு எழுதப் போவதற்கு கூட இந்த அளவுக்கு தயாராகி இருக்க மாட்டோம்; அந்த அளவிற்கு ராத்திரி பகலாக 3, 4 மணி வரை மக்கள் பிரச்சினைகளைப் பேச பிரிப்பேர் செய்து சட்டமன்றத்திற்கு வருகிறோம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இங்கே வந்தால் எப்போது பார்த்தாலும் சண்டை மட்டுமே நடப்பதால், தயாரித்து வந்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசவே முடிவதில்லை என்று வேதனை தெரிவித்தார்.

“நானும் கடந்த ஒரு வாரமாக மிகவும் பொறுமையாக இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டேன்; சண்டை போடுபவர்களுக்கே மீண்டும் மீண்டும் சபைத்தலைவர் பேச வாய்ப்பு தருகிறார்” என சபாநாயகரிடமே நேரடியாக முறையிட்டார். பொதுமக்கள் பலரும் அவையின் சண்டைகளைப் பார்க்கப் பிடிக்காமல் தொலைக்காட்சியை அணைத்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், இது மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ‘சட்டமன்றம்’, வீண் ‘சண்டை மன்றம்’ கிடையாது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசி அமர்ந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in