“அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் திமுக அரசு செய்த துரோகம்” சட்டம் ஒழுங்குக்கு பாடம் எடுத்த உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் திமுக அரசு செய்த துரோகம்” சட்டம் ஒழுங்குக்கு பாடம் எடுத்த உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் குறிப்பிட்டு ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே புதிய வாக்குவாதம் வெடித்தது . பேரவையில் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

பேரவையில் ஆவேசமாக உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மிகப்பாரிய தவறைக் கடந்த திமுக அரசு செய்தது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொதுவாகப் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாப்பது சட்டப்பூர்வமான விதிமுறை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அந்த மாணவியின் விவகாரத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அந்தப் பெண்ணின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் முதல் தகவல் அறிக்கையில் வெளியிட்டுப் மிகப்பெரிய தவறைச் செய்தது திமுக அரசுதான் என்று ஆதாரங்களுடன் பேரவையில் அடுக்கினார். சட்டப்படி மறைக்கப்பட வேண்டிய விபரங்களை வெளிப்படையாக அறிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை அம்பலப்படுத்தியதாக அமைச்சர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அவையில் இருந்த திமுக உறுப்பினர்களிடையே கடும் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in