திமுகவில் பரபரப்பு..! “தவெகவை ஜெயிக்க வச்சதே நீங்கதான்” மைக் பிடுங்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ரகுபதி – முன்னாள் MLA உதயம் சண்முகம் இடையே மேடையில் கடும் வாக்குவாதம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவில் பரபரப்பு..! “தவெகவை ஜெயிக்க வச்சதே நீங்கதான்” மைக் பிடுங்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ரகுபதி – முன்னாள் MLA உதயம் சண்முகம் இடையே மேடையில் கடும் வாக்குவாதம்…!!

Published

on

புதுக்கோட்டையில் நடைபெற்ற வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், கழக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் ஆகியோரிடையே மேடையிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெல்ல வேண்டிய அறந்தாங்கி தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஏன் விட்டுக் கொடுத்தீர்கள் என்று உதயம் சண்முகம் திடீரென மேடையில் ஏறி கேள்வி எழுப்பியதே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, உதயம் சண்முகத்தின் கையில் இருந்த மைக்ரோபோனைப் பிடுங்கி, “அறந்தாங்கியில் தவெகவை (தமிழக வெற்றிக் கழகம்) வெற்றி பெற வைத்ததே உன்னுடைய மகன்தான்” என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார். இந்தத் திடீர் மோதலாலும், தவெகவின் வெற்றிக் குறித்த வெளிப்படையான குற்றச்சாட்டுகளாலும் செயற்குழு கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையே பெரும் கூச்சல், குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in