மானங்கெட்ட ஆதரவு..! அதிகாரப் பசியில் விஜய்… கைகட்டி நிற்கும் கூட்டணிகள்… மோடியுடன் ரகசியக் கூட்டு… அப்பாவுவின் அதிரடி அட்டாக்.. நடுநடுங்கும் தவெக அரசு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மானங்கெட்ட ஆதரவு..! அதிகாரப் பசியில் விஜய்… கைகட்டி நிற்கும் கூட்டணிகள்… மோடியுடன் ரகசியக் கூட்டு… அப்பாவுவின் அதிரடி அட்டாக்.. நடுநடுங்கும் தவெக அரசு..!

Published

on

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆதரவு கட்சிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் தலைவர்களையும், அதிமுகவின் ஒரு பிரிவு தலைவரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டியே விஜய் ஆட்சி அமைத்தார் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த எந்த நகர்விலும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்கவே இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு புறக்கணிப்புகளுக்கு பிறகும், காங்கிரஸ் கட்சி விஜயின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதுடன், அடுத்த பிரதமர் விஜய் தான் என்று அமைச்சர் பேசும்போது மேஜையை தட்டி வரவேற்றது வெட்கக்கேடானது என சாடியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொண்டதால் 100 நாட்களில் 12 ஆணவக் கொலைகள் நடந்தபோதும் விசிக அமைதி காப்பதாகவும், இடதுசாரி இளைஞர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுத்த விஜயின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள் தாங்கிப்பிடிப்பது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அதேபோல், திமுகவை விட்டு விலகி விஜய்க்கு ஆதரவு அளித்ததால் பக்ரீத் பண்டிகையின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதாக அப்பாவு சாடியுள்ளார். மறுபுறம், GenZ இளைஞர்களிடையே செல்வாக்கை இழந்து வரும் பிரதமர் மோடி, அச்சத்தின் காரணமாக விஜயுடன் இணைந்து ‘Vijay Dalapathi’ என்ற பெயரில் போலி ரீல்ஸ்களை பல நூறு கோடி ரூபாயில் இந்தியில் தயாரித்து பரப்புரை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக உருவாக்கப்படும் போலியான கருத்துக்கணிப்புகளில், விஜயை 3-வது இடத்திலும் பிற கட்சிகளை பின்னடைவிலும் காட்டுவது மக்களை ஏமாற்றும் பிம்பமே ஆகும். இத்தகைய பின்னணியையும் கொடுமைகளையும் உணராமல், விஜயின் தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டணி கட்சியினர் இனியாவது விழித்துக் கொள்வார்களா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in