LATEST NEWS
“செயல்பாடு சரியில்ல” லண்டன் பயணம் முடிந்து திரும்பியதும் ஆக்ஷன்… முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..? கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெக-வின் புதிய அமைச்சரவை பட்டியல்..!!
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பதவியில் இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களது இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சர் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியதும் இந்த அமைச்சரவை புனரமைப்பு அதிகாரப்பூர்வமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின்படி, முக்கியப் பொறுப்புகள் புதிய அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, ராஜ்மோகனுக்கு நிதி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையும், மரிய வில்சனுக்கு தொழில்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், கீர்த்தனா சமூக நலத்துறை அமைச்சராகவும், குமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும், ரமேஷ் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் புதிய பொறுப்புகளை ஏற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலாகா மாற்றங்கள் மட்டுமின்றி, தற்போதைய அமைச்சர்களுக்கான கூடுதல் பொறுப்புகளும் இந்த மாற்றத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவுக்கு கூடுதலாக வனத்துறை ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. நிர்வாக ரீதியாகச் தொய்வடைந்த துறைகளை முடுக்கிவிடுவதற்காகவே முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
