LATEST NEWS
முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்திய கருணாநிதி… அன்றே நடந்த ஊழல்… சர்க்காரியா கமிஷன் அறிக்கையை வாசித்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்..!!
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் முந்தைய திமுக ஆட்சியின் மீதான ஊழல் புகார்களைப் பட்டியலிட்டுப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினர் ஆதாரங்களைக் கேட்டு அமளியில் ஈடுபட்டதால், “கடந்த வாரம் பேசும்போது எனது மேஜையில் மூன்று முக்கியக் கோப்புகள் இருப்பதாகக் கூறினேன்; அந்த 3 ஃபைல்களைத் திறப்பதற்கு முன்னால் இன்று ஒரு சாம்பிள் காட்டுகிறேன்” எனக் கூறி சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் கையில் எடுத்தார்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ள ‘வீராணம் திட்டம்’ என்ற தனி அத்தியாயத்தை முதலமைச்சர் விஜய் அவையில் படித்துக் காட்டினார். 1970-களில் திமுக ஆட்சியின்போது, வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தைச் ‘சத்தியநாராயணா பிரதர்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தனது அதிகாரத்தையும் முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த டெண்டரைப் பெறுவதற்காக, கருணாநிதியின் மருமகன் மாறன் என்பவர் 2.5 சதவீத கமிஷன் கேட்டதாகக் கோப்பில் உள்ள விவரங்களை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், 1970 முதல் 1974 வரை ஏழு தவணை முறைகளில் மொத்தம் 29 லட்சம் ரூபாய் கையூட்டு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனை “இன்றைக்கு மக்கள் லோனுக்கு EMI கட்டுவது போல, அன்றைக்கே இன்ஸ்டால்மென்ட் முறையில் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்” என்று அவர் மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசியதால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
