அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா..? “என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்” மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக… இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்த கணவன்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா..? “என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்” மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக… இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்த கணவன்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் துரௌலி கிராமத்தில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கஜேந்திர சங்க்வார் (30) என்ற நபருக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருந்த நிலையில், அவர் அஸ்மா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் தன் முதல் குடும்பத்தைக் கைவிட்டு, அஸ்மாவை நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அஸ்மா தனது மதத்தை மாற்றி, தனது பெயரையும் சப்னா என்று மாற்றிக்கொண்டார்.

திருமணம் நடந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சப்னா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கஜேந்திரனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. “என்னை சந்தேகப்படுகிறீர்களா?” என்று சப்னா கணவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த கஜேந்திரன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சப்னாவின் தலையில் பலமாகத் தாக்கினார்.

Advertisement

அதன் பிறகு, கஜேந்திரனே காவல் துறைக்குத் தொடர்பு கொண்டு, “நான் என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சப்னாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கஜேந்திரனைத் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in