LATEST NEWS
அடக்கொடுமையே.. கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்.. விநாயாகர் அன்னதானத்தில் நேர்ந்த விபரீதம்.. பகீர் சிசிடிவி வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில், விநாயாகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த சுஜாதா என்ற 46 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்னதானப் பணிகளில் தீவிரமாக உதவி செய்துகொண்டிருந்த போது, அவர் நிலைதடுமாறி கொதித்துக்கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்தில் உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விநாயகர் வழிபாட்டின் போது நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
