பகீர்..! அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்… உலகையே அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்… உலகையே அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’..!!

Published

on

உலகையே அச்சுறுத்தி வரும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வரும் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான இடைப்பட்ட 6 மாத காலத்தில் உலகளவில் 4,50,000க்கும் அதிகமானோர் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கக்கூடும் என்று க்ளைமேட் இம்பாக்ட் லேப் நடத்திய புதிய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த தீவிர வெப்ப மாறுபாடு, புவி வெப்பமயமாதலுடன் இணைந்து ‘சூப்பர் எல் நினோவாக’ உருவெடுத்துள்ளதே இந்த பெரும் அசாதாரண சூழ்நிலைக்கு முதன்மை காரணமாகும்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய ‘க்ளோபல் சவுத்’ பகுதியிலேயே மிக அதிகமாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 66,800 கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்தமாக 19,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

Advertisement

பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் பதிவாகலாம் என்று அந்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் குறிப்பாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாவதால் தென் இந்தியாவில் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும், கோடைகாலம் தொடங்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in