LATEST NEWS
விஜய்க்கு அடுத்தடுத்து ஷாக்..! த.வெ.க. எம்.எல்.ஏ.க்கு திடீர் நெஞ்சு வலி…. ஐசியூவில் அனுமதி..!!
புதுச்சேரி, மணவெளி தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA ராமுவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான உதவி ஆணைகளை வழங்கும் அரசு விழாவில் பங்கேற்றிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான முதுகு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது த.வெ.க. எம்.எல்.ஏ.க்கு திடீர் நெஞ்சு வலி …. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்
அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் அவசரப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில் அவரது ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன ஏற்கெனவே மற்றொரு அரசியல் பிரமுகரான வி.எஸ். பாபுவும் இதேபோல் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், தற்போது தவெக எம்.எல்.ஏ ராமுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
