CRIME
“ஷாப்பிங் போகலாம் வா..!” செவிலியரை கூட்டிச்சென்று முதலைகள் ஆற்றில் கணவன் செய்த கொடூர காரியம்.. ஐந்து நாட்களுக்குப் பின் அம்பலமான நாடகம்.. திடுக்கிடும் பின்னணி..!1
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் இட்டாவா எல்லையில், ஏற்கனவே திருமணமான சத்ய பிரகாஷ் ஜாதவ் என்ற நபர், தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த ஸ்நேஹ்லதா பாண்டே என்ற செவிலியரைக் கொடூரமாகக் கொலை செய்து முதலைகள் நிறைந்த பச்னடா ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி கான்பூருக்கு ஷாப்பிங் கூட்டிச் செல்வதாகக் கூறி, ஸ்நேஹ்லதாவைத் தனது பைக்கில் அழைத்துச் சென்ற சத்ய பிரகாஷ், அங்கு அவரைத் திட்டமிட்டு கொலை செய்து ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் ஆற்றில் வீசியுள்ளார். அதன் பின்னர் எதுவும் தெரியாதது போல், 5 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என அவரே நாடகமாடிப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சஞ்சய் பாண்டே அளித்துள்ள புகாரில், சத்ய பிரகாஷ் தனது தலித் அடையாளத்தை மறைத்து, பிராமணர் என்று பொய் கூறித் தனது மகளை ஏமாற்றிக் குடும்பம் நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தம்பதியருக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தன்னை அதிகாரப்பூர்வ மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்நேஹ்லதா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. கொலை செய்வதற்கு முன்பாக, அந்தக் குழந்தையைத் தனது முதல் மனைவியிடம் சத்ய பிரகாஷ் ஒப்படைத்துள்ளார். முதலைகள் அதிகம் வாழும் ஆற்றில் உடல் வீசப்பட்டதால், ஸ்நேஹ்லதாவின் சடலத்தைக் கண்டெடுப்பதில் காவல்துறையினருக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது
