“நீ என் பிள்ளையா..? வெளியே போ” முதல் மனைவி குழந்தையை வீட்டை விட்டு துரத்தும் 2-ஆவது மனைவி… பரிதவிக்கும் தந்தை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ என் பிள்ளையா..? வெளியே போ” முதல் மனைவி குழந்தையை வீட்டை விட்டு துரத்தும் 2-ஆவது மனைவி… பரிதவிக்கும் தந்தை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

எகிப்து நாட்டில் தந்தை ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவரது முன்னாள் மனைவி தனது சிறு வயது மகளை ஆடைகள் மற்றும் பொம்மைகள் அடங்கிய பையுடன் வீட்டை விட்டு வெளியே துரத்தும் கொடூரக் காட்சி பதிவாகியுள்ளது. இந்தச் செயலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தத் தந்தை சமூக ஒற்றுமைத் துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு தனது குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், கடினமான சூழ்நிலையில் நீண்ட நேரம் மோட்டார் சைக்கிள் டெலிவரி வேலை செய்து வருவதாகவும் அந்தத் தந்தை விளக்கினார். முன்னாள் மனைவிக்குக் குழந்தையை வளர்ப்பதற்கான உதவித் தொகையை அனுப்பி வந்த போதிலும், வீட்டின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட அவர், குழந்தையைத் தந்தை வசம் கழற்றிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் வேலையா அல்லது குழந்தையைக் கவனிப்பதா என்று தெரியாமல் அந்தத் தந்தை திகைத்துப்போய் பரிதவித்து வருகிறார்.

Advertisement

தான் வேலைக்குச் செல்லும் நேரங்களில் தன் மகளைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் தவிப்பதாகக் கூறிய அந்தத் தந்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசும் உடனடியாகத் தலையிட்டுத் தனது குழந்தைக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தாயின் அரவணைப்பின்றி நடுவழியில் கைவிடப்பட்ட இந்தச் சிறுமியின் நிலை இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in