CRIME
“மாப்பிள்ளைகளே உஷார்..!” உணவில் மயக்க மருந்து கலந்து.. விடிவதற்குள் புதுப்பெண் செய்த ‘அந்த’ பகீர் காரியம்… கொள்ளைக் கும்பலின் பயங்கர ஸ்கெட்ச்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், திருமணம் என்ற பெயரில் இளைஞர்களை ஏமாற்றி, அவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடித்து வந்த ஒரு பயங்கர கும்பலைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நீங்கள் திருமணம் செய்வதற்காகப் பெண் தேடிக் கொண்டிருப்பவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஹரித்வார் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில், போலி மணமகள் உட்பட இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில், இக்கும்பல் முதலில் திருமண ஆசை காட்டி இளைஞர்களைத் தங்களது வலையில் வீழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையோடு, சமயம் பார்த்து மணமகனின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிடுவர். மணமகன் மயக்கமடைந்தவுடன், அந்தப் போலி மணமகள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டில் உள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடிவிடுவார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ருக்மினா, அப்துல் பாரி, புனீத் குமார், புனீத்தின் மனைவி மற்றும் ஃபதே சிங் மீனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
