“நடுரோட்டில் நடந்த ஹாலிவுட் பட பாணி கொடூரம்..” காரின் பானட்டில் தொங்கிய வாலிபர்! நிறுத்தாமல் 2 கி.மீ தூரம் பறந்த ஓட்டுநர்.. பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நடுரோட்டில் நடந்த ஹாலிவுட் பட பாணி கொடூரம்..” காரின் பானட்டில் தொங்கிய வாலிபர்! நிறுத்தாமல் 2 கி.மீ தூரம் பறந்த ஓட்டுநர்.. பரபரப்பு சம்பவம்..!!

Published

on

உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரின் சிதார்கஞ்ச் பகுதியில், இரு கார்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்திற்குப் பிறகு, சேதமடைந்த காரின் உரிமையாளர் தப்பியோட முயன்ற மற்றொரு காரின் பானட் மீது ஏறித் தடுக்க முயன்றதும், அவரைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் காரை அமிதவேகமாக ஓட்டிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிப்பதற்காக வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டத் தொடங்கினார். அவரை நிறுத்தக் கோரி அந்த இளைஞர் காரின் பானட் மீது ஏறித் தொங்கிய நிலையிலும், இரக்கமில்லாத அந்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து காரைச் செலுத்தியுள்ளார்.

பானட்டில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய அந்த இளைஞரை, அந்த ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வழியே கொடூரமாக இழுத்துச் சென்றுள்ளார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர்கள், உடனடியாக ‘டயல் 112’ என்ற அவசர எண் மூலம் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரை அதிரடியாகப் பறிமுதல் செய்து, ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரைக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in