LATEST NEWS
“யாரும் பார்த்திராத விசித்திரக் காட்சி..” வானத்தில் இருந்து நேராக ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொட்டித்தீர்த்த மழை.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!!
மெக்சிகோவில் பகல் நேரத்தில் சாலையின் ஒரே ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டும் வானத்திலிருந்து கொட்டித் தீர்த்த விசித்திரமான மழையைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர். பார்ப்பதற்கு வானத்திலிருந்து யாரோ ஒரு பெரிய வாளியில் தண்ணீரை நேராகக் கீழே ஊற்றுவது போலத் தோன்றிய இந்த அரிய இயற்கை நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்துள்ளனர். இது சாதாரண மழை அல்ல, மாறாக அறிவியல் பூர்வமாக “மைக்ரோபர்ஸ்ட்” என்று அழைக்கப்படும் மிகவும் அரிய வகை மழைப் பொழிவாகும்.
இந்த விசித்திரமான நிகழ்வின் போது, மேகக் கூட்டங்கள் தங்களுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த ஈரப்பதத்தையும் சுற்றியுள்ள மற்ற இடங்களுக்குப் பரவாமல், மிகக் குறுகிய செங்குத்தான தூணாக ஒரே இடத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக வெளியிடுகின்றன. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய இந்த மைக்ரோபர்ஸ்ட் இயற்கை நிகழ்வு குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
