“நிபந்தனைக்கெல்லாம் நோ..!” ஈரானின் ஆஃபரை அதிரடியாக நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்.. அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்..? எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நிபந்தனைக்கெல்லாம் நோ..!” ஈரானின் ஆஃபரை அதிரடியாக நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்.. அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்..? எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

Published

on

ஹார்முஸ் ஜலசந்தியை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் விதித்த நிபந்தனைகளுடனான முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அமெரிக்க ராணுவ அழுத்தத்தைக் குறைப்பது, துறைமுக முற்றுகையை விலக்குவது, எண்ணெய் தடைகளைத் தளர்த்துவது மற்றும் பிராந்திய போர் நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஜலசந்தியைத் திறக்க முடியும் என ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அந்த முக்கிய நீர்வழிப்பாதை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ட்ரம்பின் இந்த வெளிப்படையான நிராகரிப்புக்குப் பிறகும், ஈரான் பேச்சுவார்த்தையை முழுமையாகக் கைவிடவில்லை. அமெரிக்க அதிபரின் அறிக்கைகள் முரண்பாடாக இருப்பதாகக் கூறியுள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஓமன் போன்ற மத்தியஸ்தர்கள் வாயிலாக அமெரிக்காவிடம் இருந்து அதிகாரப்பூர்வ இறுதிப் பதில் வந்த பிறகே அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தால் சர்வதேச எண்ணெய் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ஓமன் இரு தரப்பையும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in