“34 பில்லியன் டாலர் சொத்து… ஆனா மகளுக்கு நோ பணம்..” கோடி கோடியா பணமிருந்தும் மகளுக்கு உதவ மறுத்தது ஏன்.? பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் காரணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“34 பில்லியன் டாலர் சொத்து… ஆனா மகளுக்கு நோ பணம்..” கோடி கோடியா பணமிருந்தும் மகளுக்கு உதவ மறுத்தது ஏன்.? பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் காரணம்..!!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சின் முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) சொத்துகளுக்கு சொந்தக்காரரும் உலகின் பெரும் பணக்கார பெண்மணிகளில் ஒருவருமாவார். கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் சமூக சேவைப் பணிகளுக்கு நிதியுதவி அளித்து வரும் இவர், தனது இளைய மகள் பீபி கேட்ஸ் தொழில் தொடங்க முதலீடு செய்ய பணம் கேட்கும்போது தர மறுத்துவிட்டார். பீபி கேட்ஸ் தனது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து ‘பியா’ என்ற பேஷன் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகளின் விலைகளை ஒப்பிட்டு சிறந்த சலுகைகளைக் கண்டுபிடிக்க உதவும் இணையதளமாகும்.

தனது மகளின் நிறுவன முதலீட்டிற்குப் பணம் தர மறுத்தது குறித்து விளக்கிய மெலிண்டா, அது ஒரு உண்மையான பிசினஸ் என்றால் பிற முதலீட்டாளர்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்றும், தான் பணம் கொடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தனது மகள் தொழிலில் நிராகரிப்பு மற்றும் சவால்களை நேரடியாக எதிர்கொண்டு சுயமாக வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெண் தொழில்முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களைச் சந்தித்தாலும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் மெலிண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

முன்னதாக பில் கேட்ஸ் தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பெறுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், அதே கொள்கையை அவரது முன்னாள் மனைவி மெலிண்டாவும் பின்பற்றுகிறார். கோடி கோடியாய் சொத்து இருந்தும் மகளுக்குப் பணம் கொடுக்க மறுத்த மெலிண்டாவின் இந்த முடிவு, பிள்ளைகள் அவரவர் சொந்த உழைப்பில் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கேட்ஸ் குடும்பத்தின் கொள்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in