“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் அவனுக்கா..?” வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் கதவை பூட்டிய தவெக பெண் நிர்வாகி… 100-க்கு கால் செய்து நடந்த சம்பவம்…!!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் அவனுக்கா..?” வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் கதவை பூட்டிய தவெக பெண் நிர்வாகி… 100-க்கு கால் செய்து நடந்த சம்பவம்…!!!

Published

on

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (47) என்ற நபர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை செல்வி (43) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமாகி பள்ளிக்கரணையில் வசித்து வந்தனர். சித்திரை செல்வி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த தவெக பகுதி செயலாளர் முகேஷ் என்பவருடன் சித்திரை செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. கணவர் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தில், சித்திரை செல்வி தனது கள்ளக்காதலன் முகேஷுடன் சென்னையில் உல்லாசமாகச் சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துத் தெரிந்த கணவர் மகேந்திரன், கடந்த 2025 ஏப்ரல் மாதமே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் CSR மட்டுமே பதிவு செய்ததால், மகேந்திரன் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்தகைய சூழ்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திடீரென சென்னை பள்ளிக்கரணை வீட்டிற்கு மகேந்திரன் வந்துள்ளார். அப்போது வீட்டில் சித்திரை செல்வியுடன் முகேஷ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மகேந்திரனைக் கண்டதும் அவர்கள் இருவரும் வீட்டின் கதவை உள்ளே பூட்டிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, 100 என்ற எண்ணிற்கு அழைத்து போலீசாரை வரவழைத்து முகேஷை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.

Advertisement

இதைத் தொடர்ந்து போலீசார் தவெக நிர்வாகி முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கணவர் மகேந்திரன், தான் சிங்கப்பூரில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கொடுத்த 250 சவரன் தங்க நகை, வீடு, ஹாஸ்டல், சலூன் உள்ளிட்ட அனைத்தையும் தனது மனைவியிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது மனைவியுடன் தொடர்பில் இருக்கும் முகேஷ் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பள்ளிக்கரணை போலீசார் இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in