CRIME
ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்… விசாரணையில் அம்பலமான கொடூரம்.. கணவனின் உடலை தண்டவாளத்தில் வீசிய பெண்ணின் வாக்குமூலம்..!!
கேரள மாநிலம் கொச்சி ஏலமக்காரா பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த கொச்சி போலீசார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 42 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தற்கொலை அல்லது விபத்து என கருதப்பட்ட இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் ஒரு அதிர்ச்சியூட்டும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒளிந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த 42 வயதுடைய அந்தப் பெண், தனது முதல் கணவரை பிரிந்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு கொச்சியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர், அப்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த மூத்த மகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடூர கொடுமையைக் கேட்டு அந்தத் தாய் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இரண்டாவது கணவர் கடுமையான மதுபோதையில் இருந்த சமயம் பார்த்து, அந்தப் பெண் அவரைத் சரமாரியாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்தத் கொலையை மறைப்பதற்காகத் தனது கணவரின் உடலை இரவோடு இரவாகக் கொண்டு சென்று அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது இரண்டு மகள்களையும் கூட்டிக் கொண்டு சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பியோட முயன்றபோது, உஷாரான தனிப்படை போலீசார் அவரை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
