LATEST NEWS
ஆலியா தனது மகளின் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்!! வைரலாகும் வீடியோ.. குவியும் லைக்குகள்!!
விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மனசா. கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்த இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
மகளுக்கு ‘ஐலா சையத்’ என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஐலா செம பேமஸ் ஆகிவிட்டார். இந்நிலையில் சஞ்சீவ் – ஆல்யா இருவரும் ஐலா உடன் விளையாடும் கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு “உன் முதல் மூச்சு எங்களை அழைத்துச் சென்றது” என கூறி பதிவிட்டுள்ளார்.
