CRIME
“ஆடைகளைக் கழற்றச் சொல்லி மிரட்டல்.. ” நள்ளிரவில் மதுபோதையில் வந்து வார்டன் செய்த கொடூரம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி, மாநகராட்சிப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் விடுதி வார்டன் குமரேசன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் உள்ள இந்தக் காப்பகத்திற்கு நள்ளிரவில் மதுபோதையில் வந்த வார்டன், தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை எழுப்பி இரும்புக் கம்பியால் தாக்கியதுடன், அவர்களின் ஆடைகளைக் கட்டாயப்படுத்திக் கழற்றச் சொல்லி பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அழுதுகொண்டே தங்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் காப்பகத்திற்கு விரைந்து வந்து வார்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வார்டன் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காப்பகத்தில் தங்கியுள்ள மற்ற சிறுவர்களுக்கும் இது போன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து போலீசாரும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் இந்தச் சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
