LATEST NEWS
“வாங்கிட்டு வர சொன்னேனா இல்லையா..?” வேலை அவசரத்துல சமோசாவை மறந்த புருஷன்… ஆத்திரத்தில் அடித்து நொறுக்கி ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பிய மணைவி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலீபித்தைச் சேர்ந்த சாதனா என்பவர், தனது கணவர் சௌரப்பைப் பணியின் நிமித்தம் சந்தைக்குச் சென்றபோது சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், சௌரப் இதர வேலைகளில் மூழ்கியதால் சமோசா வாங்க மறந்துவிட்டார்.
இதைக் கவனித்த சாதனா, இந்தச் சிறிய விஷயத்திற்காக தனது கணவர் சௌரப் மீது கடும் கோபம் கொண்டு, அவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சௌரப், சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
