LATEST NEWS
எஸ்.பி.பி-யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? மகிழ்ச்சியில் மருத்துவர்கள்! மாலையில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன.
நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில், ‘சிகிச்சைக்கு, அவரது உடல் நிலை நன்கு ஒத்துழைக்கிறது. ‘ஆன்டிபயாடிக்’ கொடுக்கப்பட்டது. மெதுவாக, அவரது உடல்நிலை தேறி வருகிறது.’எனினும், அவர் உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சுவாசிப்பதால், ‘க்ரிட்டிகல்’ என்றே, மருத்துவ ரீதியில் குறிப்பிட வேண்டியுள்ளது.
தற்போதுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படும்போது, குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். பாடகர் எஸ்.பி..பி. நலம் பெற வேண்டி இன்று மாலை 6 மணிக்கு அவரவர் வீடுகளில் எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினரை இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இதில் கமல், ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
