LATEST NEWS
பிக்பாஸ் ரைஸாவா இது? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் என்ற தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர ரைஸா. ரைசா வில்சன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார். ரைஸா வேலாயில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் சிறியது ஆகையால் அவர் நன்கு அறியப்படவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். பியார் பிரேமா காதலில் சிந்துஜாவாக நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சவுத் பிலிம்பேர் விருதை வென்றார். அதனை தொடர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அந்த படங்கள் இன்னும் ரிலீஸாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரைசா சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம். எனினும், அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தினால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரைஸாவின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து இப்படி எல்லாம் புகைப்படம் எடுத்து பதிவிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இவர் சர்ச்சைக்குரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றார்.
Do you see what I see☀️☀️☀️☀️☀️ pic.twitter.com/mNcIXG34K4
— Raiza Wilson (@raizawilson) November 19, 2019
