CRIME
“எனக்கு அவன் தான் வேணும்..” கணவன் தலையில் கடனை சுமத்திவிட்டு ரீல்ஸ் பார்ட்னருடன் ஓடிய பெண்.. திடுக்கிடும் பின்னணி..!!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால், திருமணமான பெண் ஒருவர் சக ரீல்ஸ் தயாரிப்பாளருடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வந்த அந்தப் பெண், அதன் மூலமாக அறிமுகமான மற்றொரு நபருடன் காதலில் விழுந்து, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது ஒன்னரை வயதுப் பச்சிளம் குழந்தையைக் கூடப் பொருட்படுத்தாமல், அவதிப்படும் கணவரைத் தவிக்க விட்டுவிட்டு அவர் மறைந்துள்ளார். மனைவியின் இந்த விபரீதச் செயலால் நிலைகுலைந்து போன அவரது கணவர், குழந்தையைக் கையில் வைத்தபடி கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை நெஞ்சடைய வைக்கின்றன.
வீட்டை விட்டு ஓடிப் போனது மட்டுமின்றி, அந்தப் பெண் தனது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக வீட்டில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 10 சவரன் தங்க நகைகளையும் திருடிக்கொண்டு ஓடியுள்ளார். அதுமட்டுமன்றி, சுய உதவிக்குழு கடன் மூலமாகப் பெறப்பட்ட 1.5 லட்சம் ரூபாயையும் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகியுள்ளார். ஒட்டுமொத்தமாக வீட்டில் இருந்த பணம், நகைகள் மற்றும் குழுக்கடன் என 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரையிலான பணச் சுமையைக் கணவன் தலையில் சுமத்திவிட்டு, பச்சிளம் குழந்தையையும் கைவிட்டுச் சென்றுள்ள இந்த மனைவியின் செயல் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
