CRIME
அடக்கொடுமையே.. நண்பனை பஸ் ஏற்றிவிட்ட சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்.. கல்லுரி மாணவனுக்கு நடந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் லாரி மீது பைக் மோதிய கோர விபத்தில், பி.டெக் படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா நகரில் உள்ள பிரேரணா பள்ளியின் முதல்வர் விஷ்ணு வர்தன் ரெட்டியின் மகனான ஏ. எமிரெட்டி அபிலாஷ் ரெட்டி, சி.வி.ஆர் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரை ஹயாத்நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
அபிலாஷ் ரெட்டி சென்று கொண்டிருந்த பைக், எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது இளம் வயது மகனின் திடீர் மரணச் செய்தியைக் கேட்டு அவரது தந்தை விஷ்ணு வர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் மீளாத் துயரத்திலும் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
