CRIME
“இனி நீ எங்களுக்குச் செத்துட்ட..” மனைவி செய்த பகீர் காரியம்.. உயிருடன் இருக்கும்போதே பெற்ற தாய்க்கு திதி கொடுத்த குடும்பத்தினர்.. பதறவைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தின் பன்வர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று பிள்ளைகளின் தாயான லோகேஷ் சௌத்ரி என்ற பெண், தனது பாகன்புரா கிராமத்தைச் சேர்ந்த காதலன் ராம் லக்கன் குர்ஜாருடன் ஓடிப்போன விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கம்லேஷ் சௌத்ரியின் மனைவியான லோகேஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராம் லக்கனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் பலமுறை அவளைச் சமாதானப்படுத்த முயன்றும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாயின் இந்தச் செயலால் அவரது மூன்று பிள்ளைகளும், கணவரும் தற்பொழுது ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.
தங்களை மீறி காதலனுடன் சென்ற பெண்ணின் செயலால் கடும் கோபமடைந்த குடும்பத்தினர், அவருடனான அனைத்து சமூக உறவுகளையும் துண்டிக்கும் விதமாக ஒரு அதிரடி முடிவை எடுத்தனர். அதன்படி, சனிக்கிழமையன்று உயிருடன் இருக்கும் அந்தப் பெண்ணிற்கு அடையாளச் சிரார்த்த சடங்குகளைடும்பத்தினர் முறைப்படி செய்து முடித்துள்ளனர். தங்களுக்கு இனி அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சமூகத்திற்குத் தெரிவிக்கவே இந்தச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
