” அடச்சீ.. நீயெல்லாம் தந்தையா.. ?” மது போதையில் பெற்ற மகளிடமே அத்துமீறிய அப்பா.. அடுத்த நொடியே 17 வயது சிறுமி செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

” அடச்சீ.. நீயெல்லாம் தந்தையா.. ?” மது போதையில் பெற்ற மகளிடமே அத்துமீறிய அப்பா.. அடுத்த நொடியே 17 வயது சிறுமி செய்த கொடூர காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் எம்.ஐ.டி.சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 45 வயது தந்தையை, 17 வயது மகள் தற்காப்பிற்காகக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்தவர் ஜெய்பால் பரேலால் கோல்பிதானே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெய்பால், 12-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றபோது, அச்சிறுமி தற்காப்புக்காக வீட்டில் இருந்த மர மட்டையால் தந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுமியே 112 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த MIDC போலீஸார், சிறார் நீதி அமைப்பின் விதிகளின்படி அச்சிறுமியைக் காவலில் எடுத்து அமராவதியில் உள்ள சிறுவர் சீிருத்த இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, நாக்பூரின் பார்டி காவல் நிலையப் பகுதியில் 9 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 35 வயது நபர் ஒருவரைக் பொதுமக்கள் கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொன்ற மற்றொரு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்தவர் சத்தீஸ்கரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாராயண் தாஸ் மோகன்தாஸ் வைஷ்ணவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு அவர் ஒரு சிறுமியைக் கொடுமைப்படுத்தியபோது, அச்சிறுமி கூச்சலிட்டுக் குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் நாராயண் தாஸைப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

Advertisement

தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த நாராயண் தாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியைத் துன்புறுத்தியதற்காக நாராயண் தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த போலீஸார், தற்போது அவரை அடித்துக் கொன்ற கும்பல் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருவதுடன், சந்தேகத்தின் பேரில் சிலரைத் தடுத்து வைத்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in