LATEST NEWS
என் உயிர் இருக்கும் வரை நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டேன்.. உங்களால சொல்ல முடியுமா..? திமுகவை விளாசிய அமைச்சர் விஸ்வநாதன்..!!
தி.மு.கவினர் மக்களின் வரிப்பணத்தை முழுமையாகக் கொள்ளையடித்துள்ளனர் என்றும், தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பிற கட்சிகளை அவர்கள் கேவலமாகப் பேசி வந்துள்ளனர் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “ஒரு ஊரில் ஐந்து பேராவது இருப்பார்களா?” என்று முன்பு காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து தி.மு.கவினர் மிகவும் கிண்டலாகவும் கேவலமாகவும் பேசினார்கள் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இன்று தி.மு.கவின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் குறித்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “என் உயிர் இருக்கும் வரை நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டேன்” என்று நெஞ்சை நிமிர்த்திப் பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், தி.மு.கவில் உள்ள அமைச்சர்களோ அல்லது தலைவர்களோ யாராவது ஒருவராவது தன்னைப்போல இவ்வாறு தைரியமாக லஞ்சம் வாங்க மாட்டேன் என்று கூற முடியுமா? என அவர் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு தி.மு.கவினரால் உறுதி கூற முடியாவிட்டால், அவர்களின் சொத்துக்களை முழுமையாகக் கணக்கெடுக்க உத்தரவிடலாமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தைச் சுயநலத்திற்காகக் கொள்ளையடித்தவர்கள் தி.மு.கவினர் தான் என்பதை ஒரு பொறுப்பான அமைச்சராகத் தான் பகிரங்கமாகத் தெரிவிப்பதாகக் கூறி, தமிழக அரசியல் வட்டாரத்தில் அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
