“அம்மா, எனக்குப் பயமா இருக்கு… என்னை கூட்டிட்டு போங்க..!” 3 வயது குழந்தையின் கதறல்… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா, எனக்குப் பயமா இருக்கு… என்னை கூட்டிட்டு போங்க..!” 3 வயது குழந்தையின் கதறல்… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் வளர்ப்புப் பெற்றோரிடம் 3 வயது குழந்தையை ஒப்படைக்காமல் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வரும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்து முறைப்படி தத்தெடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இக்குழந்தையை வளர்த்து வந்த தம்பதியினரிடம் முறையான தத்து ஆவணங்கள் இல்லை எனக் கூறி, அதிகாரிகள் குழந்தையைப் பிரித்துச் குழந்தைகள் நல மையத்திற்கு மாற்றியுள்ளனர். அங்கு குழந்தையைக் காணச் சென்ற வளர்ப்புத் தாயைப் பார்த்து, “அம்மா, என்னை உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள்.. எனக்குப் பயமாக இருக்கிறது” என்று அக்குழந்தை கதறி அழுதது ஒட்டுமொத்தப் பகுதியையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தங்களது தத்தெடுப்பு பாரம்பரிய முறைப்படி நடந்தது என வலியுறுத்தி அந்தத் தம்பதியினர் உயர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்றே குழந்தையை உடனடியாகப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவு வந்து பல நாட்களாகியும் அதிகாரிகள் குழந்தையை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதற்கிடையில், பெற்றோரைப் பிரிந்த கவலையில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதால், தங்களது குழந்தையை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in