CRIME
“நள்ளிரவில் பயங்கரம்.. வயிற்றிலேயே பாய்ந்த தொடர் கத்திக்குத்துக்கள்..!” நண்பனை ரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொன்ற பீகார் சமையல்காரர்.. நடுங்கவைக்கும் பின்னணி..!!
சென்னை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கத்தில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 45 வயது கட்டிடத் தொழிலாளியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஹோட்டல் தொழிலாளியைத் திருவேற்காடு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருவேற்காட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்த பீகார் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் மற்றும் கட்டிடத் தொழிலாளியான கமலக்கண்ணன் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கமலக்கண்ணன் அரவிந்த் குமாரைத் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் மதுபோதையில் கமலக்கண்ணன் வீட்டிற்குச் சென்ற அரவிந்த் குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமலக்கண்ணனின் வயிற்றில் கொடூரமாகப் பலமுறை குத்தியுள்ளார். இதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி மற்றும் மகன்களைப் பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்த கமலக்கண்ணன் கொலை செய்யப்பட்டது குறித்துத் தகவல் அறிந்த திருவேற்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலைக் கைப்பற்றிக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த குற்றவாளி அரவிந்த் குமாரை, சனிக்கிழமை காலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி அவர்களது மறைவிடத்திலிருந்து அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை திருவேற்காடு போலீசார் அவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
