பகீர்.. வாடிக்கையாளர்கள் ரிட்டர்ன் வந்த பார்சல்… உள்ளே இருந்த அதிர்ச்சி.. CCTV-யில் சிக்கிய அந்த 21 வயது இளைஞன்.. டெலிவரி நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சி திருட்டு..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்.. வாடிக்கையாளர்கள் ரிட்டர்ன் வந்த பார்சல்… உள்ளே இருந்த அதிர்ச்சி.. CCTV-யில் சிக்கிய அந்த 21 வயது இளைஞன்.. டெலிவரி நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சி திருட்டு..!!

Published

on

சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில், டெலிவரி செய்யப்படாமல் வாடிக்கையாளர்களிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பார்சல்களில் இருந்த இரண்டு விலையுயர்ந்த மொபைல் போன்களைத் திருடியதாக 21 வயது ஊழியர் பிரதுமனா கிருஷ்ணா என்பவரைக் கிண்டி குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்த இளைஞர், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்குச் சென்றடையாமல் மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பும் பொருட்களைச் சரிபார்த்துப் பதிவு செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 28 ஆகிய தேதிகளில் டெலிவரி ஆகாமல் திரும்ப வந்த பார்சல்களை அந்த நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மேலாளர் பகவதி முருகன் (40) என்பவர் ஆய்வு செய்தபோது, அதிலிருந்த இரண்டு மொபைல் போன்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் சார்பில் பகவதி முருகன் கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது, ஊழியர் பிரதுமனா கிருஷ்ணா பார்சலில் இருந்து போன்களைத் திருடுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டி போலீசார் பிரதுமனா கிருஷ்ணாவை அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ஒரு மொபைல் போன் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆன்லைன் நிறுவன ஊழியரே பார்சல் பொருட்களைத் திருடிய இந்தச் சம்பவம் கிண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in